தேவகோட்டை வந்த ஆம்னி பேருந்தில் நகை திருடிய இளம் பெண் உள்பட 3 பேர் கைது.
தேவகோட்டை, மார்ச்.20-
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் நகை திருடிய வட மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் 2 ன் பட 3 பேரை தேவகோட்டை போலிஸார் கைது செய்தனர்.தேவகோட்டை அருகே நெய் வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் காளேஸ்வரி (52) இவர் கணவர் இறந்து விட்டார் இவர் தனது மகளுடன் சென்னையில் வசித்து வருகிறார். இவர் கடந்த நவம்பர் மாதம் சென்னையிலிருந்து தேவகோட்டைக்கு ஆம்னி பேருந்தில் வந்த போது தனது பையில் 44 பவுன் தங்க நகைகளை கொண்டு வந்த போது தேவகோட்டை பேருந்து நிலையம் அருகே இறங்கி தனது பையை பார்த்த போது நகை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார் பின்பு அவர் தேவகோட்டை நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் அப் புகாரின் பேரில் விசாரணை நடத்தி வந்தார் விசாரனையில் வட மாநில கும்பல் சம்பந்தப்பட்டிருப்பது விசாரனையில் தெரிய வந்தது அதைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித் நாதன் உத்தரவின் பேரில் தேவகோட்டை உதவி காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், தேவகோட்டைடவுன் போலிஸ்இன்ஸ்பெக்டர் பேபி உமா, தாலுகா சப் இன்ஸ்பெக்டர் கள்மீனாட்சி சுந்தரம், மற்றும் திருமுருகன், இராமச்சந்திரன் ஆகியவர்கள் கொண்ட தனிப்படை டெல்லி விரைந்து அங்கு தமிழ்நாடு பட்டாலியன் போலீஸ் படையுடன் உத்திரப் பிரதேசம் மாநிலம் சென்று விசாரனை நடத்தினர் விசாரனையில் நகைகளை திருடிய கும்பலைச் சேர்ந்த முசாபர் (44) ஆஷ்முகமது(42) இருவரையும் கைது செய்தனர் விசாரணையில் திருடிய நகைகளைக் கொண்டு நகைக் கடை நடத்தியுள்ளது விசாரனையில் தெரிய வந்தது. மேலும்இந்த திருட்டில் தொடர்புடைய நித்தி வர்மா (22) என்ற இளம் பெண்ணையும் கைது செய்தனர் அவர்களிடமிருந்து ரூ 7 லட் சத்து 70 ஆயிரத்தையும் போலீஸார் கைப் பற்றினர். மேலும் விசாரனையில் கோவை மாவட்டத்தில் 51/2 கிலோ தங்கம் கடத்தலில் தொடர்புடையவர்கள் என்பதும் கர்நாடகம்.ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இரவு நேரங்களில் பஸ்களில் பயணம் செய்வது போல் நடித்து விழித்திருந்து பயணிகள் தூங்கிய பின்பு அவர்கள் வைத்திருக்கம் பணம் நகைகளை திருடி வந்ததும் தெரிய வந்தது கைது செய்யப்பட்ட 3 வரையும் தேவகோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்