*குற்றம் குறை சொல்வதால் திட்டம் வந்துவிடாது.எய்ம்ஸ் கட்சி பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட திட்டம் இல்லை. நாடளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட திட்டம். என்ன சட்ட அங்கீகாரமோ அதன்படி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி பெறப்படும் என மதுரையில் அமைச்சர் உதயகுமார் பேட்டி*
மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், மற்றும் மதுரை சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்துகொண்டபின் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்து பேசுகையில்
அந்தந்த தொகுதி சார்ந்த மக்கள் பிரதிநிதிகள் வைக்கும் கோரிக்கைகளை அதிமுக அரசு நிறைவேற்றுவோம். 234 தொகுதிக்கும் எடப்பாடி பழனிச்சாமியே முதல்வர். எனவே பொதுமக்கள் பிரதிநிதிகள் மனுக்களுக்கு முன்னுரிமை கொடுத்து கோரிக்கைகளை விரைவாக பரிசீலிக்கும் அரசு அதிமுக அரசு. சுகாதாரத்தில் மருத்துவத்தில் வளர்ப்பணிகளில் புரட்சி செய்து வருகிறார் முதல்வர்.எய்ம்ஸ் மருத்துவமனை அமைய மத்திய அரசுக்கு தேவையான இடத்தை சாலையை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். மின்சாரத்தை, ரயில் போக்குவரத்திற்கு தேவையான நடவடிக்கைகளை செய்ய ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம். முதலில் கட்டிடடம் எழுப்ப அஸ்திவாரம் முக்கியம்.அதுபோல எய்ம்ஸ் மருத்துவமனை அமைய முதல் அடிப்படையாக உள்ளது நிலம் அடையாளம் கண்டு கொடுப்பது தான். எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் மனம் திறந்து பாரட்டவில்லை யெனில் அதற்கு நான் பொறுப்பு அல்ல.எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஆதாரம் பெறுவதில், திட்டத்திற்கு முன்னுரிமை அளிப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைய முதல்வர் தொடர்ந்து மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்.எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் வாழ்த்தவில்லை யென்றாலும் கவலையில்லை. எதிர்க்கட்சிகள் குற்றம் குறை சொல்வதில் தான் மும்மரமாக உள்ளனர். மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பிரதமரே அடிக்கல் நாட்டினார்.எதிர்க்கட்சிகள் வாழ்த்த மனம் இல்லை என்றால் கவலை இல்லை. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இடம் இல்லை போர்டு இல்லை என ஸ்டாலின் சொல்லுகிறார். குற்றம் குறை சொல்வதால் திட்டம் வந்துவிடாது.எய்ம்ஸ் கட்சி பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட திட்டம் இல்லை. நாடளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட திட்டம். என்ன சட்ட அங்கீகாரமோ அதன்படி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி பெறப்படும் என்று பேசினார்.