திருவண்ணாமலை 28 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி.
திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.
கீழ்பெண்ணாத்தூர், மார்ச் 31: திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட வேளானந்தல் கிராமத்தில் வசித்து வருபவர் ஏழுமலை. இவரது மகன் ஆனந்தன் (28). இவர் சென்னை வேளச்சேரியில் உள்ள மாலில் காசாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த 15 ஆம் தேதி சென்னையில் இருந்து தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். வந்த அவருக்கு தொடர்ச்சியாக காய்ச்சல் சளி இருமல் வந்ததால் ஒருவாரமாக கோணலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்து வந்த நிலையில், கடந்த 28 ஆம் தேதி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் செல்லப்பட்டு அவரது மாதிரிகள் அனைத்தும் சென்னைக்கு அனுப்பப்பட்டது.
*அதன் அடிப்படையில் நேற்று இரவு அவருக்கு கொரோனா தொற்று உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.
இவர் தற்பொழுது கொரோனா சிறப்பு வார்டு தீவிர கண்காணிப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவின் பேரில்
வேளானந்தல் ஊராட்சியை மாவட்ட காவல்துறை மற்றும் சுகாதாரத் துறை தனது முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளது. மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்ட நிருபர் சி.அரிகிருஷ்ணன் 9787615073