காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடந்த 25 நாட்களாக தொடர் தர்ணா போராட்டம்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடந்த 25 நாட்களாக தொடர் தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது இந்நிலையில் மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையினால் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் திவாலாக போடுவதைக் கண்டித்து லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் சார்பில் லால்பேட்டையில் உள்ள தேசிய வங்கிகளில் பணம் எடுப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
காலை 10 மணிக்கு சுமார் 500க்கும் மேற்பட்டோர் இந்தியன் வங்கி சென்று தங்களது வங்கிக் கணக்கில் இருக்கும் சேமிப்பு பணங்களை மொத்தமாக எடுப்பதற்கு பணம் எடுக்கும் படிவத்தினை பூர்த்தி செய்து அளித்து வருகின்றனர். அதனையடுத்து வங்கியில் போதிய பணம் இல்லாத காரணத்தால் கணக்காளர் ஒருவருக்கு ரூபாய் 49000 மட்டும் வழங்கப்படும் என வங்கி மேலாளர் தெரிவித்தார். மேலும் முழு பணத்தினை ஓரிரு தினங்களுக்குள்முழுமையாக அழித்து விடுவதாக கூறி அடுத்து பொதுமக்கள் வங்கிக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர் ஏற்கனவே நேற்று ஜமாத் சார்பில் அனைத்து பள்ளிவாசல்களிலும் பணம் விடுப்பு போராட்டம் குறித்த அறிவிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே நாளில் வங்கியில் கணக்கு வைத்த அனைவரும் மொத்த பணத்தையும் எடுக்க வந்ததால் லால்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.