திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்
நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகள் கொரோனா வைரஸ் தடுப்பு முன் நடவடிக்கையாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் பாதுகாக 144 தடை உத்தரவு அமல்படுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட காவல்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி உழவர் சந்தை
செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் செயல்பட வட்டாட்சியர் பார்த்தசாரதி, தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் திருமூர்த்தி, காவல் ஆய்வாளர் சாலமோன்ராஜா தலைமையில் முறைப்படுத்தி சுற்றுப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களுடைய விளை நிலங்களில் உள்ள விளைபொருட்களை கொண்டுவந்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்கள். காய்கறிகளை நகரத்தில் உள்ள பொதுமக்கள் வாங்குவதற்கு வட்டப்பாதையில் நின்று ஒருவரை ஒருவர் இடைவெளிவிட்டு வாங்காமல் வழக்கம்போல் கூட்ட நெரிசலை ஏற்படுத்தி வாங்கிச் செல்கிறார்கள் இந்த நிலையில் 144 தடை உத்தரவு பிறப்பித்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுமக்கள் இயல்பு நிலையில் எப்படி இருந்ததோ அப்படியே பொதுமக்கள் வாகனங்கள் போன்ற நெரிசலை ஏற்படுத்தினார்கள். மேலும் 144 தடை உத்தரவை கடுமையாக்கும்படி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை. செங்கம் சி.அரிகிருஷ்ணன்