செங்கம் அரசு மருத்துவமனையில் உலகம் செவிப்புலன் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு காது கேளாதவர்களுக்குகான இலவச பரிசோதனை முகாம் நடைபெற்றது.
செங்கம் .மார்ச் 05.
திருவண்ணாமலை மாவட்டம்செங்கம் அரசு மருத்துவமனையில் உலகம் செவிப்புலன் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் காது கேளாதவர்களுக்குகான இலவச பரிசோதனை முகாம் நடைபெற்றது.
செங்கம் அரசு மருத்துவமனையில் உலகம் செவிப்புலன் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு காது கேளாதவர்களுக்குகான இலவச பரிசோதனை முகாம் தலைமை மருத்துவ அலுவலர் மரு.பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்த முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தேசிய நல்வாழ்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் மரு.சவுத்ரி காது- மூக்கு-தொண்டை சிறப்பு நிபுணர் பங்கேற்ற முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் காது-மூக்கு-தொண்டை பரிசோதனை முகாமில் பங்கேற்ற 85.பயனாளிகளுக்கு காது, மூக்கு, தொண்டை குறைபாடுகளை கண்டறியப்பட்டும் நபர்களுக்கு செவித்திறன் கருவி இலவசமாக வழங்கபட்டது.
இந்த முகாமில் செங்கம் பகுதியில் உள்ள காது-மூக்கு-தொண்டை குறைபாடு உள்ளவர்கள் பங்கேற்று பரிசோதனை செய்து பயன் பெற்றவர்கள். மேலும் கடந்த ஆறுமாத காலமாக 300.க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு செவித்திறன் கருவிகளை இதுவரை வழங்கியுள்ளார்கள். இந்த முகாமில் செவிலிய கண்காணிப்பாளர் மேரிசீலா, மருத்துவ உதவியாளர்கள், செவிலியர்கள் பங்கேற்று சிறப்பிக்கிறார்கள்.