திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் சிவி சண்முகம் ஆய்வு மேற்கொண்டார்
திண்டிவனம் மார்ச் 31
திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் ஆய்வு மேற்கொண்டார்.
அனைத்து வார்டுகளுக்கும் சென்று உபகரணங்கள் சரியாக செயல்படுகிறதா எனவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் வார்டையும் பார்வையிட்டு மருத்துவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார். செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தேவையான கிருமிநாசினி மற்றும் முககவசம் மற்றும் பொதுமக்களுக்கு எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சமூக இடைவெளி விட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பதையும் பார்வையிட்டார். பணியில் இருந்த செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் அதிகமாக முக கவசம் மற்றும் கிருமிநாசினி தேவைப்படுகிறது என தெரிவித்தனர் அதற்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் சார் ஆட்சியர் அனு மற்றும் வருவாய் துறையினரிடம் திண்டிவனம் நேரு வீதியில் இயங்கிவரும் கடைகள் காய்கறி கடைகள் உட்பட பொதுமக்களுக்கு அனைத்து பொருட்களும் கிடைக்கும் வகையில் மாற்று இடமாக அரசு உதவி பெறும் பள்ளியில் உள்ள மைதானத்தை அல்லது நல்லதொரு இடத்தை தேர்வு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
ச. சரண்ராஜ்
விழுப்புரம் மாவட்டம்