குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெறக் கோரி கும்பகோணத்தில் தேசியக் கொடியை ஏந்தி காத்திருப்பு போராட்டம் தொடக்கம்
கும்பகோணம், பிப்.22:
கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி இஸ்லாமியர்கள் தேசியக் கொடியை ஏந்தி குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் தேசிய மக்கள் தொகை பதிவேடு தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட 3 சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரி கும்பகோணத்திலுள்ள அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் நேற்று மாலை முதல் இஸ்லாமியர்கள் குடும்பத்துடன் தேசிய கொடி ஏந்தி காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இந்த போராட்டத்திற்கு இந்திய தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவர் ஜாபர்,
எஸ்டிபிஐ மாவட்ட பொதுச்செயலாளர் இப்ராஹிம், எஸ்டிபிஐ முன்னாள் மாவட்ட தலைவர் பைசல்முகமது, எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் முகம்மது பைசல் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் மனைவி குழந்தைகளுடன் குடியுரிமைச் சட்டம்உள்ளிட்ட மூன்று சட்டங்களை திரும்பப் பெறக் கோரி மத்திய அரசை கண்டித்து கையில் தேசியக் கொடி ஏந்தி கண்டன கோஷம் அளித்தனர்.
குடிமை சட்டம் உள்ளிட்ட சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெரும்வரை காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் தொடங்க உள்ளது கழக நிர்வாகிகள் தெரிவித்தனர்