பண்ருட்டியில் முஸ்லிம்களின் இன்றைய நிலை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது அப்போது மத்திய மாநில அரசுகளை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .
மத்திய அரசு புதிய குடியுரிமை சட்ட மசோதா சட்டம் CAA , NRC , NPR சட்டத்திற்கு எதிர்த்து கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் சார்பில் முஸ்லிம்களின் இன்றய நிலை விளக்க பொதுக்கூட்டம்மாவட்ட மாவட்ட தலைவர் ஷேக் முகமது தலைமையில் நடைபெற்றது நடைபெற்றது இதில் இதில் மாவட்ட நிர்வாகிகள் காதர்பாஷா, உமர்பாரூக் ,யாசீன் , அப்துல் வகாப், யாசர், ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேச்சாளர்கள் கோவை ரஹ்மத்துல்லாஹ் , ஜமால்உஸ்மானி, ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள் கிளைத்தலைவர் ஷேக் கூடு நன்றியுரை கூறினார் இதில் பண்ருட்டி பகுதியில் இருந்து பெண்கள் ஆண்கள் பெரியவர்கள் ஆயிரக்கணக்கான முஸ்லிம் கலந்து கொண்டனர் மத்திய மாநில அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர் இதை தொடர்ந்து நமது நாடு மதச்சார்பற்ற நாடு என்றும் மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும் இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிர்க்கவும் புதிய குடிவுரிமை மசோதா சட்டம் இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர் தமிழர்களின் பெயரை சொல்லி ஆட்சிக்கு வந்த மத்திய மாநில அரசை கண்டித்து வருகின்ற 29.அம் தேதி 500க்கும் அதிகமான இடங்களில் முஸ்லிம்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் மார்ச் 18.அம் தேதி 8 மத்திய சிறைச்சாலைகளை நிரப்ப கூடிய சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர் CAA , NRC , NPR சட்டங்களை தங்கள் மாநிலங்களில் அமுல்படுத்த மாட்டோம் என்று அறிவித்த புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்களுக்கு தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் சார்பில் நன்றி கலந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது . இதில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர் .