<no title>தமிழகத்திலும்  மாண்புமிகு முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி  அவர்கள் சட்ட பேரவையில் சி.ஏ.ஏ. என்.ஆர்.சி. என்.பி.ஆர்க்கு எதிராக திர்மானம் நிறை வேற்ற பட  வேண்டும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் கயல் அப்பாஸ் கோரிக்கை



சி.ஏ.ஏ. எதிர்த்து போராடியவர்கள் மீது தாக்குதல்  : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் கண்டனம் !

 

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது  . 

 

மத்திய பா ஜ க அரசு கொண்டு வந்துள்ள சி.ஏ.ஏ., என்.பி.ஆர் மற்றும் என்.சி.ஆர்க்கு எதிராக  சென்னை பழய வண்ணார பேட்டையில் நேற்று  நடை பெற்ற அமைதியான வழியில்  போராட்டம் நடத்திய பெண்கள் மற்றும் அப்பாவி மக்கள் மீது கண்முடிதமாக தடியடி நடத்திய காவல் துறையினரை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது . 

 

காவல் துறையின் கண்முடிதனமான  இத்தாக்குதலில் போராட்ட காரர்கள் சிலர் படு காயம் அடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டுள்ளார். போராட்ட களத்தில் பெண்களுக்கு  பாதுகாப்பாக இருந்த ஆண்களை தர தர வெனு இழுத்து அடித்து கைது செய்ய பட்டது .  போராட்டகாரர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடுவர்களை ஓடுக்க வேண்டும் என்பதற்க்காக இந்த காவல் துறை தடியடி நடத்தியுள்ளதா என சந்தேகம் எழுகிறது ?  மேலும் இச்சம்பவம் குறித்து மனித உரிமை ஆணையம் தானாக முன் வந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது . 

 

நாடாளுமன்றத்தில் சி.ஏ.ஏ. என்.பி.ஆர். என்.ஆர்.சி.  நிறைவேற்ற பட்ட நாள் முதல் இன்று வரையிலும் இந்தியா முழுவதும் இந்த கருப்பு சட்டத்தை எதிர்த்தும் மத்திய பா ஜ க அரசை கண்டித்தும் மக்கள்  போராடி வருகிறார்கள் . குறிப்பாக தமிழகத்தில்  ஜனநாயக ரீதியான தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள். அரசுயிடம் கோரிக்கை வலியுறுத்தி  அகிம்சை வழியில் போராடுவது ஜனநாயக உரிமை . 

 

எனவே  :  சி. ஏ.ஏ. என்.ஆர்.சி.என்.பி.ஆர்க்கு எதிராக பல்வேறு மாநிலத்தில் சட்ட பேரவையில் திர்மானம் நிறைவேற்றபட்டது . அதைபோல் தமிழகத்திலும் 

மாண்புமிகு முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி  அவர்கள் சட்ட பேரவையில் சி.ஏ.ஏ. என்.ஆர்.சி. என்.பி.ஆர்க்கு எதிராக திர்மானம் நிறை வேற்ற பட  வேண்டும் எனவும்.  மேலும் அப்பாவி மக்கள் மீது தடியடி நட்த்திய காவல் துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம். என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்




Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image