சோழபுரத்தில் அனைத்து ஜமாத் மற்றும் இயக்க கட்சிகள் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது கூட்டத்தில்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் திரு வேல்முருகன், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், ம ம க பொது செயலாளர் ஹாஜாகனி,மமக செயலாளர் சல்லி நசீர், இஸ்லாமிய அழைப்பாளர் சவுக்கத் அலி, முஹம்மது யூசுப், தமிழ் விடுதலைப்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், நீல புலிகள் கட்சி தலைவர் புரட்சிமணி, கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் செல்வமணி உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்
கும்பகோணம் அடுத்த சோழபுரம் உப்பு கார தெரு பகுதியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மதரீதியாக மக்களை பிளவுபடுத்தும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள CAA. NPR சட்டத்தை உடனே வாபஸ் பெற வலியுறுத்தியும்
குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராகவும், இம்மூன்றையும் கண்டித்து தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற
வலியுறுத்தி
சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் தடியடி நடத்திய காவல்துறை மீது துறைரீதியாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்
சென்னையில் காவல்துறை தடியடியில் உயிரிழந்த குடும்பத்திற்கு ரூபாய் ஒரு கோடி இழப்பீடு தொகை வழங்கவும் காயமடைந்த நபர்களுக்கு ரூபாய் 25 லட்சம் இழப்பீடுத் தொகையாக தமிழக அரசு வழங்க இக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது இந்த கூட்டம் நடைபெற்றது மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் பெண்கள் உள்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.