நல்ல பழக்கம் ஒரு நல்ல மனிதரை உருவாக்கும் மாணவர்களுக்கு திருப்பூர் மாநகர காவல் ஆணையர் சஞ்சய்குமார்அறிவுரை

நல்ல பழக்கம் ஒரு நல்ல மனிதரை உருவாக்கும் என்று பள்ளி மாணவர்களுக்கு திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அறிவுரை கூறினார்.





திருப்பூர் சின்னாண்டி பாளையத்தில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளியில் ஆண்டுவிழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திருப்பூர் மாநகர காவல் ஆணையர் திரு.சஞ்சய் குமார் மற்றும் அதிமுக முன்னாள் கவுன்சிலர் வசந்தாமணி ஆகியோர் கலந்து கொண்டனர். திரு.சஞ்சய் குமார் அவர்கள் விழா மேடையில் பேசுகையில், பள்ளிப்பருவத்தில் நாம் கற்றுக்கொள்ளும் நல்ல பழக்கங்கள் தான் வாழ்நாள் முழுவதும் தொடரும், எனவே அனைத்து மாணவர்களும் நல்ல பழக்கங்களை கற்றுக் கொள்ள வேண்டும் அது மிகச்சிறந்த மனிதராக உருவாக்கும் என்று பேசினார். முன்னதாக விழாவில் திரு சஞ்சய் குமார் அவர்களின்  குறும்படம் திரையிடப்பட்டது,  இதை அடுத்து பள்ளி மாணவர்கள் திரு. சஞ்சய் குமார் அவர்களின் உருவத்தை ஓவியமாக வரைந்து அவருக்கு பரிசளித்தனர், தொடர்ந்து பள்ளியின் செய்தித்தாளை திறந்து வைத்தார். இந்த விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது, தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக்  சங்கத் தலைவர் டாக்டர ப.சரவணகுமார்,  பள்ளி தாளாளர் கொன்ராட் லோபஸ், கரீனா லோபஸ், கிரிசில்டா லோபஸ், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.




Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image