கும்பகோணம் நகராட்சி தரப்பில் வழங்கப்பட்ட குடிநீரில் கழிவுநீர் கலப்பதால் வாந்தி பேதி காரணமாக மேலும் 12 பேர் மருத்துவமனையில் அனுமதி
கும்பகோணத்தில் கடந்த சில தினங்களாக கும்பகோணம் நகரில் பாதாள சாக்கடை அடைத்துக்கொண்டு கழிவுநீர் வீதியெங்கும் வழிந்தோடி காணப்படுகிறது இந்நிலையில் கழிவுநீர் குடிநீருடன் கலந்ததன் காரணமாக கும்பகோணம் இதயா கல்லூரி அருகே ஆனைக் காரன்பாளையம் என்ற பகுதியில் நேற்றைய தினம் நகராட்சி குடிநீர் பருகிய 9 பேர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் வாந்திபேதி காரணமாக அனுமதிக்கப்பட்டனர்
இந்த நிலையில் மேலும் 9 நபர்கள் இதே பிரச்சினை காரணமாக இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் இதனைத்தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் மூன்று பேர் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது
பாதிக்கப்பட்ட 18 நபர்கள் தற்போது கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனையடுத்து அப்பகுதியில் கும்பகோணம் நகராட்சி தரப்பில் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களுக்கு மருத்துவ வசதிகள் மற்றும் கழிவு நீரை சீரமைக்கும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது