சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் அனுமதியின்றி குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து திருப்பூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு போராட்டத்தில் மத்திய மாநில அரசிற்கு எதிரான கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறையை கண்டித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புதமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.-1000 மேற்பட்ட பெண்கள் உட்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு