தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற நலசங்கம் அமைப்பு சார்பில் மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
கும்பகோணம் டி என் எஸ் டி சி தலைமையகம் முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற நல அமைப்பு சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது இது ஆர்ப்பாட்டத்தில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி மாதம் முதல் தேதியே ஓய்வூதியம் வழங்கவும் டிஏ உயர்வு மற்றும் அதன் நிலுவைத் தொகையை உடனே வழங்க மற்றும் ஓய்வுபெறும் அன்றே பணப் பலன்களை வழங்கிவிட வலியுறுத்தியும் மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்திட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளுடன் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில்
கும்பகோணம் கிளை தலைவர் திரு முத்துக்குமாரசாமி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது இதனையடுத்து
குடந்தை கோட்டத்திற்கு உட்பட்ட காரைக்குடி புதுக்கோட்டை திருச்சி கரூர் தஞ்சாவூர் நாகை உள்ளிட்ட கிளைகளிலிருந்து சங்க உறுப்பினர்கள்
சங்க செயலாளர் திரு ரவி மாநில துணைப் பொதுச் செயலாளர் திருச்சி திரு சண்முகம் மற்றும் மாநில துணை தலைவர் புதுக்கோட்டை திரு இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள் மேலும் பொருளாளர் திரு கோவிந்தராஜ் திரு சின்னச்சாமி காரைக்குடி பவுன்ராஜ் தஞ்சாவூர் திரு ஞானசேகரன் நாகை திரு கணபதி கும்பகோணம் கிளை நிர்வாகிகள் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்