ஆர்எஸ்எஸ்: சேவை, தியாகம் மற்றும் தேசக்கட்டுமானத்தில் ஒரு நூற்றாண்டுராஜ்நாத் சிங்பாதுகாப்பு அமைச்சர்
ஆர்எஸ்எஸ்: சேவை, தியாகம் மற்றும் தேசக்கட்டுமானத்தில் ஒரு நூற்றாண்டு
ராஜ்நாத் சிங்
பாதுகாப்பு அமைச்சர் 
1925, செப்டம்பர் 27 அன்று நாக்பூரில் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தை (ஆர்எஸ்எஸ்) டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவர் நிறுவினார். இன்று அது இந்தியாவின் சமூகக் கட்டமைப்பை வடிவமைத்து, இறையாண்மையைப் பாதுகாத்து, பாதிக்கப்படும் சமூகங்களுக்கு அதிகாரம் அளித்து, காலத்தால் அழியாத நாகரிக மாண்புகளை வளர்த்து, தன்னலமற்ற சேவையின் உருவகமாக நிற்கிறது. ஆர்எஸ்எஸ் தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் இந்தத் தருணத்தில், அதன் பயணத்தை எண்ணிப்பார்ப்பது மதிப்புக்குரியது. 
அண்மையில் தில்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில், ஆர்எஸ்எஸ் சர்சங்சலக் திரு மோகன் பகவத், அமைப்பின் அனைவரையும் உள்ளடக்கிய நெறிமுறைகளை நாட்டிற்கு நினைவூட்டினார். "மதம் என்பது தனிமனிதத் தெரிவாகும். இதில் எந்தவித ஆசைகாட்டுதலோ அல்லது பலவந்தமோ இருக்கக்கூடாது" என்பதை அவர் வலியுறுத்தினார். மோதலுக்கு  பதிலாக நல்லிணக்கம், பிரிவினைக்கு பதிலாக கூட்டான வலிமை, பொருளியல் நல்வாழ்வில் மட்டுமல்ல, குணநலன்களை வளர்ப்பதிலும் வேரூன்றிய ஒரு சமூகத்தை உருவாக்குதல் என்ற சங்கத்தின் அடிப்படைத் தத்துவத்தை இது எதிரொலிக்கிறது:  
இந்த வகையில், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் நூற்றாண்டு கால பங்களிப்பிற்காக ஆர்எஸ்எஸ்-ஐ இந்த ஆண்டு சுதந்திர தின உரையில்  பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியதில் ஆச்சரியம் எதுவுமில்லை. "உலகின் மிகப்பெரிய அரசு சாரா நிறுவனம்" என்று அதனை அழைத்த அவர், சுதந்திர இந்தியாவில் மிகவும் செல்வாக்கு மிக்க சமூக-கலாச்சார இயக்கங்களில் ஒன்றாக ஆர்எஸ்எஸ் எவ்வாறு தனித்து நிற்கிறது என்பதை நாட்டு மக்களுக்கு  நினைவூட்டினார்.
நாட்டின் ஒருங்கிணைப்பில் ஆர்எஸ்எஸ்-ன் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பழங்குடி படையெடுப்பாளர்கள் ஜம்மு காஷ்மீரைத் தாக்கியபோது, மகாராஜா ஹரி சிங்கை இந்தியாவில் சேர வற்புறுத்த சர்தார் வல்லபாய் படேல்  ஆர்எஸ்எஸ் தலைவரின் உதவியை நாடினார். அவரும் ஸ்ரீநகருக்குச் சென்று உடனடி இணைப்பின் அவசியத்தை அவருக்கு உணர்த்தினார். இந்தியாவையும் அதன் உணர்வையும் வலுப்படுத்த ஆர்.எஸ்.எஸ் எப்போதும் பாடுபட்டுள்ளது. 1975 அவசரநிலையின் போது, அதனை  எதிர்ப்பதில்  ஆர்எஸ்எஸ்  உறுதியாக இருந்தது.  இந்தியாவின் அரசியலமைப்பைப் பாதுகாக்க லட்சக்கணக்கானவர்களை அணிதிரட்டியது.
பிரிவினையின் துயரத்தால் சுதந்திரம் சூழப்பட்டபோது, ஏராளமான உயிரிழப்பு ஏற்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறும் கட்டாயம் ஏற்பட்டது. இந்தத் துயரத்திற்கிடையே, ஆர்எஸ்எஸ் சேவகர்கள் கட்டுப்பாடான,  தன்னலமற்ற சக்தியாக தனித்து நின்று, பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, மறுவாழ்வு அளித்துப் பாதுகாத்தனர். 1984-ல் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின் போதும், ஆர்எஸ்எஸ் ஒரு மீட்பராக களமிறங்கியது. அது சீக்கிய சமூகத்திற்கு தங்குமிடம், பாதுகாப்பு மற்றும் நிவாரணம் வழங்கியது. 
மகாத்மா காந்தி விஷயத்தில் ஆர்.எஸ்.எஸ் நியாயமற்ற முறையில் விமர்சிக்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்குள் இருந்ததைப் போல், சில விஷயங்களில் மகாத்மா காந்திக்கும் ஆர்எஸ்எஸ்ஸுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்தன என்பது உண்மைதான். ஆனால் அந்த வேறுபாடுகள்  பரஸ்பர மரியாதைக்கு ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. 1947, செப்டம்பர் 16 அன்று, பிரிவினை குழப்பத்திற்கிடையே தில்லியில் ஆர்எஸ்எஸ் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய காந்திஜி, அதன் சேவை மற்றும் தியாக உணர்வைப் பாராட்டினார். 1948, ஜனவரி 30 அன்று மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டபோது அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் சங்க வரலாற்றில் முதல் முறையாக ஆர்எஸ்எஸ் அனைத்து ஷாகாக்களையும் 13 நாட்களுக்கு நிறுத்தி வைத்தது. 
ஆர்எஸ்எஸ் தனது நூற்றாண்டை நிறைவு செய்தாலும், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அதன் பங்களிப்பு உறுதியானதும், தொடர்ந்து வளர்ந்து வருவதும் ஆகும். கோவிட்-19 நோய்த்தொற்றின்போது, மே 2021-ல், 300 ஆர்எஸ்எஸ் சேவகர்கள் கோலாரில் நீண்ட காலமாக செயலிழந்திருந்த பிஜிஎம்எல் மருத்துவமனையை இரண்டு வாரங்களுக்குள் புதுப்பித்து, நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு மிகவும் தேவையான நிவாரணத்தை வழங்கினர். நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் ஆர்எஸ்எஸ். தேசக்கட்டமைப்புக்கான தனது பங்களிப்பை  அமைதியாக எவ்வாறு தொடர்ந்து செய்து வருகிறது என்பதை இத்தகைய உதாரணங்கள் பிரதிபலிக்கின்றன.
Popular posts
காதி மூலம் கிடைக்கும் லாபம் நேரடியாக நாட்டின் நெசவாளர்களுக்குச் சென்று பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை ஊக்குவிக்கிறது: மத்திய அமைச்சர் திரு அமித் ஷா
Image
காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஊடகவியலாளர்களுக்கான பயிலரங்கம் நடைபெற்றது
Image
வேளாண்மையை மாற்றி அமைத்தல், விவசாயிகளின் செழிப்பை பாதுகாத்தல் -டாக்டர் ரமேஷ் சந்த் புகழ்பெற்ற விவசாயப் பொருளாதார நிபுணர் மற்றும் கொள்கை நிபுணர், நிதி ஆயோக்கின் உறுப்பினர்
மேம்படுத்தப்பட்ட வர்த்தக எளிமை அற்புதமான முதலீடுகளை ஈர்க்கும் -சௌமியா காந்தி கோஷ்16-வது நிதி ஆணைய உறுப்பினர் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி குழுமத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகர்
சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி குறித்த மீம்ஸ், காணொலிகள், வர்ணனைகள் பிரபலமாகியது