பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம், சமூகத்தைக் காப்பாற்றுவோம்-டாக்டர் ஷாமிகா ரவி
பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம், சமூகத்தைக் காப்பாற்றுவோம்
-டாக்டர் ஷாமிகா ரவி

பெண் குழந்தைகள் படித்து என்ன செய்யப் போகின்றனர் என்று ஒரு காலத்தில் கேட்ட  ஒரு நாட்டில், கடந்த பத்தாண்டுகளில், இந்தியா பெண் கல்வியில் சக்திவாய்ந்த மாற்றத்தைக் கண்டுள்ளது.
குஜராத் முதலமைச்சராக, திரு நரேந்திர மோடி இருந்தபோது, பெண் சிசுக்கொலை மற்றும் பெண் குழந்தைகளின் கல்வியறிவின்மை போன்ற பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கு பன்முக அணுகுமுறை தேவை என்பதை உணர்ந்தார். 2003-ல் தொடங்கப்பட்ட கன்யா கெளவானி இயக்கம், பெண் கல்வி குறித்த விழிப்புணர்வை ஊக்குவித்தது, அதே நேரத்தில் இளம் பருவத்தில் பள்ளிகளில் சிறுமிகளுக்கு தனி கழிப்பறைகள் இல்லாதது போன்ற தடைகளை நிவர்த்தி செய்தது.
 குஜராத்தில் பெண் கல்வியறிவு விகிதம் தேசிய சராசரியை விடக் குறைவாக இருந்த நிலையில், தேசிய சராசரியான 64% ஐ விட 70% ஆக நிலையான அதிகரிப்பைக் கண்டது. 
பொது நிகழ்வுகளில் பெறப்பட்ட பரிசுகளை தனிப்பட்ட முறையில் ஏலம் விட்டு, பெண் கல்விக்காக ரூ 19 கோடி திரட்டிய திரு நரேந்திர மோடி,  ரூ 21 லட்சத்தை தனிப்பட்ட பங்களிப்பாகவும் வழங்கினார்.  பெண் கல்வி என்பது வெறும் அரசின் திட்டம் மட்டுமல்ல, அது ஒரு பொது இயக்கம் என்ற  ஒரு வலுவான தாக்கத்தை உருவாக்கினார். 
குஜராத்தின் வெற்றியால் ஈர்க்கப்பட்டு, பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், இயக்கம் 2015-ல் நாடு தழுவிய அளவில் தொடங்கப்பட்டது. பெண் சிசுக்கொலையைத் தடுப்பது, பெண் கல்வியை ஊக்குவித்தல் ஆகியவை இதன் நோக்கமாகும். 
பெண் கல்வியை மேம்படுத்த இதுவரை மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்கள் நமது சமூக பரிணாம வளர்ச்சியிலும், நாடு முழுவதும் மாறிவரும் கலாச்சாரக் கண்ணோட்டங்களிலும் ஒரு முக்கிய தருணத்தைக் குறிக்கின்றன. இந்த மாற்றம் இளம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதை நோக்கமாகக் கொண்ட சிந்தனைமிக்க மற்றும் பயனுள்ள கொள்கைகளால் எளிதாக்கப்பட்ட ஒரு ஆழமான வேரூன்றிய மாற்றமாகும். தனிப்பட்ட வாழ்க்கையை மட்டுமல்ல, முழு சமூகத்தையும் மேம்படுத்தும். இந்த முயற்சிகளின் நீண்டகால தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும். இன்றைய படித்த பெண்கள் வெறும் மாணவர்கள் மட்டுமல்ல; அவர்கள் நாளைய சாத்தியமான தலைவர்கள். படித்த பெண்கள் பணியிடத்தில் சேரவும், தங்கள் குடும்பங்களின் வருமானத்திற்கு பங்களிக்கவும், தங்கள் குழந்தைகளின் கல்வியில் முதலீடு செய்யவும் அதிக வாய்ப்புள்ளது.
பிரதமர் மோடியின் தலைமையில் தொடங்கப்பட்ட மாற்றங்கள் தொடர்ந்து எதிர்காலத்தில் வேகம் பெறும், ஒவ்வொரு பெண்ணும் கற்றுக்கொள்ள, வளர மற்றும் செழிக்க உரிமை உள்ள ஒரு பிரகாசமான, சமத்துவமான சமூகத்திற்கு வழிவகுக்கும் என்று நாம் நம்பலாம். நீங்கள் ஒரு பெண்ணுக்கு கல்வி கற்பிக்கும்போது, நீங்கள் ஒரு சமூகத்தைக் காப்பாற்றுகிறீர்கள் என்று பொருளாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 
(டாக்டர் ஷமிகா ரவி, தற்போது பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும், மத்திய அரசின்  செயலாளராகவும் உள்ளார்)
***
Popular posts
காதி மூலம் கிடைக்கும் லாபம் நேரடியாக நாட்டின் நெசவாளர்களுக்குச் சென்று பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை ஊக்குவிக்கிறது: மத்திய அமைச்சர் திரு அமித் ஷா
Image
காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஊடகவியலாளர்களுக்கான பயிலரங்கம் நடைபெற்றது
Image
வேளாண்மையை மாற்றி அமைத்தல், விவசாயிகளின் செழிப்பை பாதுகாத்தல் -டாக்டர் ரமேஷ் சந்த் புகழ்பெற்ற விவசாயப் பொருளாதார நிபுணர் மற்றும் கொள்கை நிபுணர், நிதி ஆயோக்கின் உறுப்பினர்
மேம்படுத்தப்பட்ட வர்த்தக எளிமை அற்புதமான முதலீடுகளை ஈர்க்கும் -சௌமியா காந்தி கோஷ்16-வது நிதி ஆணைய உறுப்பினர் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி குழுமத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகர்
சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி குறித்த மீம்ஸ், காணொலிகள், வர்ணனைகள் பிரபலமாகியது